இடைக்கால நிருவாக இரண்டு வருட அறிக்கையொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தீர்மானிக்க ஜனாதிபதியினால் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவே இவ்வாறு அறிக்கையை தயார் செய்துள்ளது.
ஜனாதிபதி லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் இவ்வறிக்கை குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.