தேசிய அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை மறுசீரமைப்பில் மொத்தம் 10 அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இன்றைய அமைச்சரவை மாற்றத்தினை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ டுவிட்டர் செய்திச் சேவையிலேயே வெளியிடப்பட்டன.
இதில், அமைச்சரவை அந்தஸ்துள்ள ஆறு அமைச்சர்களும், மூன்று இராஜாங்க அமைச்சர்களும், ஒரு பிரதி அமைச்சரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பிரதமர் மேலதிகமாக சட்டம் ஒழுங்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்தார்