இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க அயராது பாடுபட்டார். அவரது இழப்பிற்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் என தெரிவித்துள்ளார்.
