கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 60 வியாபாரிகள் பிடிபட்டதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 75 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வியாபாரிகள் 80 ரூபா முதல் 120 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கடந்த வாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே 250 வியாபாரிகள் பிடிபட்டுள்ளதாகவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.