கொவிட் தொற்றாளர்களிள் எண்ணிக்கை அண்மைக் காலமாக பாரியளவில் அதிகரிப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் நாடு முடக்கப்படாது என சுகாதா சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், சிலர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரித்து வருகிறது.
இதனால் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகாதவர்களும் தங்களை பாதுகாத்துக்குவதற்கு தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைளில் ஈடுபடுவது அவசியமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எப்பொழுதும் முகக் கவசத்தை உபயோகியுங்கள். சமூக இடைவெளியைப் பேணுங்கள். எவ்வேளைகளிலும், கைககளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், எல்லோரிடத்திலும், ஒமிக்ரோன் வைரஸ் இருக்கும் என்ற எண்ணத்தில் நடந்துகொள்ளுங்கள். ஒருவருக்கு காய்ச்சல், தடிமல், தொண்டை வலி, இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்தியரொருவரின் உதவியை நாடுங்கள்.
மேலும், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]