தெறி பேபியை தொடர்ந்து இன்னொரு பேபி! யார் இந்த குழந்தை?
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளிய படம் தெறி. விஜய்க்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே போல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகாவிற்கு கொடுக்கப்பட்டது.
தற்போது இதற்கு அடுத்த படியாக இன்னொரு நட்சத்திரத்தை திரைக்கு காட்டவிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
காஷ்மோரா படத்திற்கு அடுத்து கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தில் அதிதி ராவ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், RJ பாலாஜி நடிக்க படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதில் முக்கியமான குழந்தை நட்சத்திரமாக பேபி தியானா நடிக்க இருக்கிறார். இவர் மாடலிங் துறையில் உள்ளவர் என்பது குறிப்பிட தக்கது.