தென்னிந்திய இமயங்கள் புகழும் ஈழத்து இயக்குனர்
புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் பல கலைஞர்களும் எதிர்பார்த்து நிற்பது, அவர்களுடைய படைப்புகளுக்கான அங்கீகாரத்தையும் ஆதரவையும் தான். ஏற்கனவே உருவாகி பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் தென் இந்திய சினிமாவிலேஇப்பொழுது கலைஞர்களும் படைப்புகளும் அதிகமாக வெளிவரத் தொடங்கி விட்டது.
இப்படியிருக்க புதிதாக வளர்ந்து வரும் கலைஞர்கள் எதிர்பார்ப்பது, எப்போது நாங்கள் இந்த சினிமா துறையினுள் நட்சத்திரங்களாக விளங்கும் ஜாம்பவான்களிடம் தங்களுடைய படைப்புகளை பார்ப்பார்கள், புகழ்வார்கள், சேர்ந்து பணிபுரிவார்கள் என்ற ஏக்கமும் ஆவலும் இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி தென் இந்தியாவிலே இருக்கும் பட்சத்தில், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு ஈழத்து ஒளிப்பதிவாளர் இன்று தென் இந்திய இமயங்களால் சிறந்த இயக்குனர் என்ற புகழை பெற்றுள்ளார். பிரித்தானியாவில் உருவாகி இருக்கக்கூடிய சில திரைப்படங்களிலும், சர்வதேச அளவிலான விளம்பரங்களிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த திரு NT நந்தா அவர்கள் இப்பொழுது அனு ஹாசன், நாசர் போன்ற திரைப்பிரபலங்களை வைத்து சர்வதேச தரத்திலான குறிப்பாக ஹாலிவுட் தரத்திலான ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
“வல்லதேசம்” எனும் தலைப்பை கொண்ட இத்திரைப்படம் லண்டனில் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டிலே இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், உலகநாயகன் கமல்ஹாசனும் கலந்து NT நந்தா அவர்களை புகழ்ந்து தள்ளி உள்ளனர்.
பெண்களை வைத்து படம் எடுப்பவர்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் NT நந்தா அவர்கள் ஒரு பெண்ணை கதாநாயகியாக வைத்து ஒரு முழு நீள படத்தை தில்லாக எடுத்திருக்கிறார் என்று கூறிய கமல் ஹாசன், இதை அவர் ஒரு advanced booking ஆக எடுத்து கொள்ளுகிறேன் என்றும் கூறினார். 30 வருடமாக ஒளிப்பதிவாளரை மாற்றாமல் வைத்திருந்தேன் இனிமேல் நந்தா அவர்கள் தான் எனது ஒளிப்பதிவாளர் என்பதையும் அழுத்தமாக பாரதிராஜா அவர்கள் கூறி இருந்தார்.