முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்தது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போராடி வரும் பொலிஸார் ஆயிரக்கணக்கான பொலிஸ் வீரர்களை வீதிகளில் நிறுத்தியுள்ளனர்.
நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதது என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்தார்.
ஏறக்குறைய ஒரு வார அமைதியின்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர்.
அதேநேரம் 1,300 வன்முறையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் போராட்டக்காரர்களின் இடையூறுகள் தென்னாபிரிக்கா முழுவதும் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று காவல்துறை அமைச்சர் பெக்கி செலே செய்தியாளர்களிடம் கூறினார்.
வன்முறை அலை தென்னாபிரிக்காவின் தடுப்பூசி நிலையங்களை தாக்கியுள்ளதுடன், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருந்து சேகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலையும் பாதித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கான நியமனங்கள் உள்ளவர்கள் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை நிலையங்கள் சூறையாடப்பட்டதாகவும், கொடூரமான மூன்றாவது அலை கொவிட்-19 தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
http://Facebook page / easy 24 news