தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெறவுள்ளது.
உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி, இன்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று சந்திக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறுகிய நேரப் பேச்சுக்களையம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.