தென் கொரியாவின் பியாங்யங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வடகொரியா அரசு தனது வீரர்கள், வீராங்கனைகளை அனுப்பி வைத்தது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தணியும் நிலை ஏற்பட்டு வந்தது.இதைதொடர்ந்து அமெரிக்கா-வடகொரியா இடையே அணு ஆயுத பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. தென்கொரியா அதிபர் மூன் ªய் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று வடகொரியா அறிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடப்பதற்கான முன்னோட்டமாக தென் கொரியா சார்பில் சியோல் உளவுப் பிரிவு தலைவர் உள்பட 10 பேர் கொண்ட குழு வடகொரியாவுக்கு நாளை வட கொரியா செல்கிறது. இவர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளனர்.இதுகுறித்து தென் கொரியா அதிகாரிகள் கூறுகையில், ‘‘தென் கொரியா அதிபர் மூன் ஜே உயர் அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை வடகொரியாவுக்கு அனுப்பவுள்ளார். இந்த குழு நாளை அங்கு சென்றடைகிறது. அப்போது அமெரிக்கா-வடகொரியா இடையிலான சமாதான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.