தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தகநிறுவனங்கள் காணப்படும் கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் அதற்குள் சிக்குண்டுள்ளனர் எனவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.