தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்றும் இன்றும் என இரு நாட்களிலும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தியல் குதிக்கவுள்ளனர்.
மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதிச் சேவைகள், சொத்துகளுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியே இப்போராட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்ளேமனம், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோருடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனவும் இதனால் கடந்த மாதமும் சில தினங்கள் அனைத்து பல்கலைக் கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதாகவும் இனிவரும் காலங்களில் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.