தூங்கும்போது தாக்குவதா? நடிகர் மோகன்லால் கண்டனம்
மோகன்லால் நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய ராணுவத்தில் ஒரு கவுரவ பதவியில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் காஷ்மீர் யுரி பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 18 பேரை கொன்ற தீவிரவாதிகளின் செயலை அவர் கண்டித்துள்ளார்.
நேற்று அவர் எழுதியுள்ள கட்டுரையில் “பாக்கிஸ்தான் வெட்கமில்லாமல் மீண்டும் தாக்கியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும்போது மட்டுமே உங்களால் தாக்க முடியும், விழித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என உலகத்திற்கே தெரியும் என கூறியுள்ளார்.
“”நான் போருக்கு ஆதரவு தெரிவிப்பவன் அல்ல.. போர் வந்தால் என்ன நடக்கும் என எனக்கும் தெரியும், அதற்காக இத்தகைய தாக்குதல்களை பொறுத்து கொண்டிருக்கவேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.