இமாலயப் பிரகடனத்திற்கு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன. அதனையடுத்து அதில் ஈடுபட்டவர்கள் கேள்விக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். நேரிலும் விமர்சனங்களை முன்வைத்தோம்.
ஆனால் அண்மைய நாளில் துரோகங்கள் தொடர்கின்ற காட்சியை கண்டு பெரும் கவலை கொள்ளுகிறேன். கனடா வந்த ஜேவிபி தலைவர் அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட பெரும் வரவேற்பில் எம்மவர்களின் தலைகளும் தெரிந்தன.
கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக கடுமையாக இயங்கிய ஜேவிபி மகிந்தவுக்கு போரை நடாத்த பெரும் தேரவை வழங்கியதுடன் வடக்கு கிழக்கையும் நீதிமன்றம் சென்று பிரித்தது.
இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசாமல் அறிவுபூர்வமான இனவாதக் கட்சியாக செயற்படும் ஜேவிபியின் தலைவரை வரவேற்க எம்மவர்கள் திரள்வது எவ்வளவு அநீதியானது?
யார் எப்படியானவர்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதிலும் இமாலயப் பிரகனடத்தின் பின்னால் இருந்த சிலரும் இங்கு முகம் காட்டியுள்ளார்கள். இவர்கள் நாளை மகிந்தவையும் கோட்டாவையும்கூட வரவேற்பார்கள்.
இவர்கள் குறித்து கடந்த காலத்திலும் எச்சரித்தேன். கொள்கையின்றி எமது போராட்டத்தை காட்டிக் கொடுத்து இனத்தை வீழ்ச்சியடைய செய்யும் இந்தத் துரோகள் குறித்து மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை