காணாமல் போனோர் பிரச்சினைக்குத் துரிதமாக தீர்வு காணுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தையும் அரசாங்கம் வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களைச் சந்திக்க இடமளிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் விரைவாகச் செயற்பட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.