ரத்கம, கந்தேகொட பகுதியில் நேற்று (05) இரவு 7 மணியளவில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரத்கம, பன்வில பகுதியை சேர்ந்த ஒருவர் மீதெ இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் மீது மூன்று கொலை வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.