எம்பிலிப்பிடிய, செவனகல, கடுபிலகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
39 வயதுடைய ஒருவரே இதன்போது உயிரிழந்ததுடன், துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டவர் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.