துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்
எட்மன்டன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எட்மன்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 வயதுடைய ஓமர் ரெறென்ஸ் அல்பேர்ட் என்ற குறித்த இளைஞன் எட்மன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பணம் மற்றும் போதை மருந்துகளை கோரி வீட்டினுள் நுழைந்த சந்தேக நபர்கள் வீட்டின் உரிமையாளர்களின் கண்களை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவன், கனேடிய இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அல்பேர்ட் என்ற குறித்த இளைஞன் வீட்டின் அடித்தளத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருந்ததாகவும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களில் ஒருவரே அல்பேர்ட் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
எனினும் சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.