அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால் மான்ட்டிகோ, சாண்டா பார்ப்பாரா, வென்சுராகவுன்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாமஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத் தீ பசிபிக் கரையோரம் நகருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1932-ம் ஆண்டுக்கு பிறகு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2,65,000 ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.
சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள், வாகனங்கள் தீக்கறையாகியுள்ளன. சுமார் 2 லட்சம் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.