வடமராட்சி கரணவாய் கலட்டிப் பகுதியில் ஆள்கள் வசிக்காத வீடொன்று திடீரெனத் தீ பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 6மணியளவில் நடைபெற்றது.
நேற்று மின்சாரம் வடமராட்சி பகுதியில் சீரற்றுக் காணப்பட்டது. இதனால் பல இடங்களிலும் மின் விளக்குகள் செயலிழந்தன. மின் ஒழுக்குக் காரணமாக வீடு எரிந்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேசமயம் ஆள்கள் வசிக்காத வீட்டில் சில துஷ்பிரயோகங்கள் இடம் பெறுவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என்றும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.