மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையத் நடத்தி வந்த தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளை முடக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதனால் லாகூரில் உள்ள ஜமாத் உத் தாவா அமைப்பினர் நடத்தி வந்த மதராசா மற்றும் பள்ளிகளை பஞ்சாப் மாகாண அரசு கையகப்படுத்தியுள்ளது. மேலும் இதில் பணிபுரிந்து வந்த 121 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. தமது பெயரை பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அவன் விடுத்த கோரிக்கையை அடுத்து அதிகாரிகள் குழு செல்ல திட்டமிட்டுள்ளது.
ஹபீஸ் சையத்தை நேரில் சந்தித்து பேச அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் விசா வழங்க மறுத்துவிட்டதால் ஹபீஸ் சையத்துக்கு பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவு அம்பலமாகியுள்ளது.