தீவிரவாதிகளை எளிதில் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய உதவும் புதிய திட்டம் ஒன்றை முதன் முதலாக ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், ஜேர்மன் அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து ஜேர்மன் உள்துறை அமைச்சரான Thomas de Maiziere பேசியபோது, ‘தீவிரவாதிகள் ஜேர்மனிக்குள் நுழைய விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வழியாகவே ஜேர்மனிக்குள் நுழைகின்றனர்.
மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் அதிகளவில் ரயில் நிலையங்களில் நடத்தப்படுகிறது.
இவற்றை முன்கூட்டிய தடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள் அடங்கிய கண்காணிப்பு கமெராக்கள் பெர்லின் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.
ஜேர்மன் பொலிசாருக்கு ஏற்கனவே அறிமுகமான தீவிரவாதிகள், சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்கள் இக்கண்காணிப்பு கமெராவில் ஏற்கனவெ பதிவு செய்யப்படும்.
பின்னர், இந்த ரயில் வழியாக அந்த தீவிரவாதி நுழைந்தால் அவனது முகத்தை கமெரா எளிதில் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பும்.
பெர்லின் ரயில் நிலையத்தில் தற்போது இத்திட்டம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தால், நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் இக்கண்காணிப்பு கமெராக்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.