தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மதுவரி மற்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.