ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முத்தையா முரளிதரனின் அண்மைய பேச்சு குறித்து கருத்தை வெளியிடும் பதிவொன்றை எழுதியதை அடுத்து சில நிமிடங்களில் தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் நாடு திவாலானது போன்ற நிலையில் கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறையும் இன ஒடுக்குமுறையும் இன்னமும் திவாலாகவில்லை என்று தீபச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகாரபூர்வமாக முகநூலை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]