ஈழக் கவிஞர் தீபச்செல்வனின் நூல்களை தனது பிறந்த நாளில் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு அன்பளித்து செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் அலெக்ஸ்.
இது தொடர்பில் தீபச்செல்வன் முகநூலில் எழுதிய பதிவு வருமாறு:
‘ஈழ தாகத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் பேசுவதனால் நான் மாத்திரமின்றி என் படைப்புக்களும் ஒடுக்கப்படுகிற சூழலில், சமானியர்கள் தரும் வரவேற்பும் கொண்டாடுதலும்தான் என்னை உயிர்ப்போடும் உந்துதலோடும் வழி நீளச் செய்கிறது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற மாணவர் தன் பிறந்த தினத்தை முன்னிட்டு தன் சொந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள தேறாங்கண்டல் பாடசாலைக்கு தன் சக மாணவர்களை அழைத்துச் சென்று ‘பயங்கரவாதி’, ‘நடுகல்’ முதலிய நாவல்கள் மற்றும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை தொகுதியின் பிரதிகளையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.
அர்த்தச் செறிவான உரையாடல்களும் குழந்தைகளை விழிப்பூட்டும் முன் மாதிரியான செயல்களுமாய் இன்றைய நாளை வரலாறு ஆக்கி அசத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந் நிகழ்வுக்கு அனுமதியளித்த பள்ளிக்கும் என் அன்பும் நன்றியும்.” என்று அதில் தீபச்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.