நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனந்தெரியாத ஒருவரால் நேற்றிரவு ரயர் போட்டு கொளுத்தப்பட்டது. திலீபனின் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படும் இந்த விசமச் செயல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அகிம்சை ரீதியில் போராடி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் தமிழர் தாயக மண்ணில் நேற்றுமுன்தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்திலும் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் நினைவுத் தூபிக்கு முன்பாக ரயர் போட்டுக் கொழுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன், இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.