எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். மரியாதை பெருகும்.
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் வேண்டும் என்று விரும்புவதுதான் முக்கியமான ஆசையாக இருக்கமுடியும். அப்படி வாழ்வில், மதிப்பும் மரியாதையும் கவுரவமும் தந்தருளும் மகாவிஷ்ணுவின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரும். மரியாதை பெருகும்.
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநம:
முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:
வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே… மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.