திருமணநாள் பரிசு கேட்ட மனைவி: விவாகரத்து கொடுத்த பிரபல கிரிக்கட் வீரர்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்கானிடம் திருமண பரிசு கேட்டதற்கு அவர் விவாகரத்து கொடுத்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இம்ரான்கானின் இரண்டாவது மனைவியின் பெயர் ரெஹாம். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்த சூழ்நிலையில் திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இது குறித்து அவரது மனைவி தற்போது கூறுகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி தங்களுடைய திருமண நாள் அதன் காரணமாக நான் அவரிடம் திருமண பரிசுகேட்டதாகவும் ஆனால் அவரோ திருமண பரிசுக்கு பதிலாக விவாகரத்து கொடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் இம்ரான்கான் அரசியலில் ஈடுபடுவதை ரெஹாம் விரும்பவில்லை. இதனால் கடந்த ஆண்டு திருமணநாளுக்கு முதல்நாள் அதாவது அக்டோபர் 30 ஆம் திகதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்