திருப்பதியில் உற்சவம் நேரங்களில் தெரிந்தோ? தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
பவித்ர உற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் அங்குரார்ப்பணத்திற்கு புற்று மண் சேகரிக்க சென்ற காட்சி.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், வருடாந்திர பூஜையின்போதும், உற்சவம் நேரங்களில் பக்தர்கள் மூலமாகவோ அல்லது பணியாளர்கள் மூலமாக தெரிந்தோ? தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று காலை தொடங்கியது. இதையொட்டி நேற்று சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வசந்த மண்டபத்தில் புற்று மண்ணை சேகரித்து நவதானியங்களை 9 பானைகளில் வைத்து அங்குரார்ப்பணம் பூஜைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து பவித்ர மண்டபத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பவித்ர உற்சவத்தின் முதல் நாளான இன்று பவித்ர மாலைகள் பிரதிஷ்டை நடந்தது. நாளை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடக்கிறது. நாளை மறுநாள் யாகம் பூர்ணாவூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.