பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து கடந்த வருடம் அமெரிக்கா வெளியேறியதன் பின்னர், தற்போது மீண்டும் இணைய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் ஒப்பந்தத்தில் பாரிய மாற்றம் ஒன்றை செய்தால் மாத்திரமே அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றுக்காக அவர் வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ‘திரும்பி வருவதற்கு சாத்தியம் உண்டு!’ என கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
முன்னதாக ‘பரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பேரழிவு’ என குறிப்பிட்டிருந்தார். பின்னர், இவ்வருட ஆரம்பத்தில் ‘கோட்பாட்டளவில் வாய்ப்பு உள்ளது’ எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.