கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் வாரம் ஒன்றிற்கு 250 ஜிபைக்குகள் காணாமல்போகும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குவதில் முன்னணி இடத்தில் கூகுள் நிறுவனம் இருந்துவருகிறது. கூகுள் நிறுவனம், பயனாளர்களுக்கு safe browser மற்றும் டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை வழங்கி வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தின் மவுன்டைன் வியூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் ஜிபைக்குகளை வழங்கியுள்ளது.
ஊழியர்கள், ஆங்காங்கே ஜிபைக்குகளை நிறுத்திவிடுவதாக நிறுவனம் அவ்வப்போது குற்றஞ்சாட்டியிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த ஜிபைக்குகளை திருடிவந்தனர்.
வாரம் ஒன்றி்ற்கு 250 ஜிபைக்குகள் வரை காணாமல்போனது.இது நிறுவனத்திற்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது.
ஜிபைக்குகள் திருட்டை தடுக்கும் பொருட்டு, பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட 30 ஒப்பந்தக்காரர்களை நியமித்துள்ளது. இதோடு மட்டுமல்லாது, அந்த ஜிபைக்குகளில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி மற்றும் பைக் லாக் வசதியும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வால்ட் ஸ்டீரிட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.