தான் உட்பட நல்லாட்சியிலுள்ள எவரும் ஊழலுக்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டார்கள் என காணி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் புதிதாக அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டது, திருடர்களை பிடிப்பதற்கே அல்லாமல், திருடர்களைப் பாதுகாப்பதற்கு அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையை இழக்காமல் செயற்படுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். திருடர்களுக்கு எதிராக தனது பதவிகளையும் விட்டுவிட்டு மக்களுடன் பாதையில் இறங்கத் தயார் எனவும் சியம்பலாண்டுவ மானாபரணகிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.