திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை.காரணமாக,மக்கள் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ் வறட்சியான கால நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றன.
11 பிரதேசசெயலாயர் பிரிவுகளிலும் உள்ள 96 கிராம சேவையாளர் பிரிவுகளில் 27646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தவிப்பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில்கிண்ணியா,மூதூர்,தோப்பூர்,தம்பலகமம்,ஈச்சலம்பற்று,வெருகல் புல்மோட்டை,கோமரங்கடவல,மொறவௌ முதலான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுவூற்று, சூரங்கல், சுங்கான்குழி ,மணியரசங்குளம், ,ஆயிலியடி முதலான கிராமங்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நடுவூற்றுக்குளம்,; மணியரசங்குளம்,பட்டியனூர்க்குளம் முற்றாக நீரின்றிக் காணப்படுகின்றது,; மீன்கள் செத்துக் காணப்படுகின்றன.நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இக்கிராமங்களில் வேளாண்மைப் பயிர்சசெய்கை வறட்சியினால் கருகிக்க காணப்படுகின்றது.வயல் நிலங்கள் வெடித்துக் காணப்படுகின்றன.
அத்துடன் வேளாண்மை.தண்ணீர் இல்லாமல் அழிவடைந்து காணப்படுகின்றது.
இதே வேளை வீட்டுத் தோட்டப்பயிர்கள் கருகி அழிவடைந்து காணப்படுகின்றன.
கால் நடைகள் தண்ணீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றன.குளங்களில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகின்றது.
கிணறுகளில் நீரைப் பெறுவது மிகக் கடினமாகவுள்ளது.
இதனால் இப்பிரதேசத்திலுள்ளவர்கள் குடி நீரைப் பெறுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.அத்துடன் விவசாயிகள்மிகவும் பாதிக்கப்ட்டுள்னர்.