100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை பிரதார கடற்கரை பிரதேசத்தில் இன்று (19) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் பிரதான கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்ற இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்.
எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக வருகைதந்ததுடன் தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய பதாகைகளையும் ஏந்தி பலூன்கள் ஊடாகவும் கோரிக்கையை முன்வைத்தனர். இதில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.