திருகோணமலை பெரியகுளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி மரணமடைந்த ஐவரின் உடலங்களும் நேற்று திங்கட்கிழமை மாலை நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்காக அல்லிப்பூ பறிப்பதற்கு தோணியில் சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவருமே பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தர்மலிங்கம் தங்கதுரை (42), டி. சங்கவி (10), சுரேஷ் கேதிராஐ் (10), சுரேஷ் யுதேஷன் (07), சுதன் பிரனாவி (07)