உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – திம்பிரிவெவ பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் குறித்த நபர் கைது செயய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ- 01ஆம் வட்டாரத்தில் வசித்து வரும் அப்புஹாமிகே வீரசேகர (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.