சினிமாத்துறையில் 48 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்டிரைக்குக்குப் பிறகு கடந்த வாரம் முதல் படங்கள் வெளியாகி வருகின்றன. தணிக்கை செய்யப்பட்ட தேதிகளின் வரிசைப்படி, வாரத்துக்கு 4 படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது.
அதன்படி இந்த வாரம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உட்பட 4 படங்களை வெளியிட அனுமதித்தனர். இந்தப்பட்டியலில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் இல்லை. ஆனாலும் தியா படத்துக்கு முன்னுரிமை கொடுத்து இந்தவாரம் வெளியிட அனுமதித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஏன் முன்னுரிமை?
புதுப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக் அறிவித்தபோது, காலா படத்தை வெளியிடாமல் லைகா நிறுவனம் சப்போர்ட் பண்ணியது. அதோடு தற்போது கவுன்சில் சார்பாக தொடங்கப்பட உள்ள டிஜிட்டல்சினிமா மாஸ்டரிங் பணியை லைகா நிறுவனம் செய்து கொடுக்க முன் வந்துள்ளது. இதன் காரணமாகவே தியா படத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாக தெகவல் அடிபடுகிறது.