மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் பாதுகாப்புப் பற்றி பேசும் விஜய், திமுக அரசையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார்.
மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பணியிடங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு இல்லாத சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் கிடைத்திட சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய விழிப்புணர்வை சர்வதேச மகளிர் தினம் வலியுறுத்துகிறது.
வைரல் காணொளி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது.
நியூ யோர்க் நகரில் 15 ஆயிரம் பெண்கள் பணி நேர குறைப்பு, தகுந்த ஊதியம், வாக்களிக்கும் உரிமை கோரி மாபெரும் பேரணி சென்றனர். ஒரு வருடம் கழித்து அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சி அந்த நாளை தேசிய மகளிர் தினமாக அறிவித்தது. நாளடைவில் உலகெங்கும் பரவி சர்வதேச மகளிர் தினமாக மாறியது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விஜய் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
திமுக அரசை விமர்சித்த விஜய்
தற்போது குறித்த காணொளி இணைய வாசிகளிடையே வைரலாகி வருகிறது.

மேலும், இந்த காணொளியில் மகளிர் பாதுகாப்புப் பற்றி பேசும் விஜய், திமுக அரசையும் நேரடியாக விமர்சித்துள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சித்ததே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக திமுக என குறிப்பிட்டு வெளிப்படையாக விமர்சித்துள்ளமையும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.