பெருங்காயத்திற்கு என்று சமையலில் தனிப்பட்ட இடம் எப்போதும் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது பெருங்காயம்.
பெருங்காயம் கார நெடியுடன் கூடிய கார்ப்பு சுவை கொண்டதாகும். சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இது ஆங்கிலத்தில ‘அசப்போட்டிடா’ என்று அழைக்கபடுகிறது.
பெருங்காயம் என்பது மருத்துவம் முதல் செரிமானம் வரை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும், இது ஆயுர்வேத மருத்துவம் முதல் சித்த மருத்துவம் பல நோய்களை தீர்க்க உதவுகின்றது.
அதிலும் தினமும் ஒரு கிளாஸ் பெருங்காய தண்ணீர் குடிப்பது இன்னும் பல பயன்களை தருகி்னறது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
பெருங்காய தண்ணீர் எப்படி செய்வது?
பெருங்காய தண்ணீர் செய்ய முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கலாம். தினமும் பெருங்காய தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
நன்மைகள்
அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்து, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்தப் பெருங்காயத்தூள் உதவுகிறது. மேலும் இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது.
பெருங்காய தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைப்பதற்கு வெகுவாக உதவுகிறது. நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதய ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் தினமும் காலையில் பெருங்காய தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தில் நாம் பெருங்காய தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது அது சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
தலைவலி வரும்போது அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெருங்காய தண்ணீரைக் குடிக்கலாம்.
மாதவிடாய் பிரச்சனையில் உள்ளவர்களுக்குப் பெருங்காய தண்ணீர் சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களுடைய உணவுகளில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. அது மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை சேர்த்து தீர்க்கும்.
பெருங்காயத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கலவைகள் உள்ளன. மேலும் இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இதன் மூலம் இரத்த ஓட்டத்தின் ஆரோக்கியத்திற்கும் இவை உதவுகின்றன.