திடீர் பல்டியடித்த தீபக்: சசிகலா குடும்பத்தை எதிர்த்து பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா மரணம் குறித்து அறிய விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அளித்துள்ள பேட்டியில், டி.டி.வி தினகரனுக்கு தலைமை பொறுப்பு வகிக்க தகுதியில்லை, அடிப்படை தொண்டர்கள் யாரும் தினகரனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதிமுக-வுக்கு தலைமை வகிக்கும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் உள்ளது, கட்சித் தலைமையை ஓபிஎஸ் ஏற்க தினகரன் ஒத்துக்கொள்வார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு மீண்டும் திரும்ப வேண்டும், அதிமுக எப்போதும் உடையாது.
ஜெயலலிதாவுக்கான அபராத தொகையை வங்கியில் கடன் வாங்கி செலுத்துவேன்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், அப்போது தான் உண்மைகள் வெளிவரும்.
மருத்துவ சிகிச்சைகள் குறித்து பற்றி பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று தான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
போயஸ் கார்டன் வீடு எனக்கும், என் சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது, சசிகலாவுக்கு ஆதரவளிப்பேன், ஆனால் அவரது குடும்பத்தின் தலைமையை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவின் அரசியல் பயணத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.