பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய தினமே வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரதமர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவலோக்க மருத்துவமனையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]