மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த கால்பந்து வீரர் Cheick Tioteன் மூன்று வயது மகன் Rafael ’RIP Daddy’ என்ற வாசகத்தை தனது டீ-சர்டில் பொறித்து தந்தைக்கு உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளான்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான Ivory Coastல் பிறந்தவர் Cheick Tiote (30), பிரபல கால்பந்து வீரரான இவர் அந்நாட்டு அணிக்காகவும், பல்வேறு உள்ளூர் அணிக்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார்.
உலக புகழ்பெற்ற பிரித்தானியாவின் Newcastle யுனைடெட் கால்பந்து கிளப்பிலும் Cheick நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சீனாவில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென Cheick மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
Cheickக்கு மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். விரைவில் நான்காவது குழந்தைக்கு தந்தையாக இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் Cheickவின் கடைசி மகனான Rafael மறைந்த தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கால்பந்து விளையாட்டின் போது Cheick அணியும், 24 என்ற எண் கொண்ட டீ-சர்டில் RIP Daddy என்ற வாசகத்தை பொறித்தும் தனது உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளான்.
24 என்ற எண் கொண்ட டீ-சர்டை Cheick கடந்த ஏழு ஆண்டுகளாக கால்பந்து விளையாடிய போது அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் Cheick இறப்பிற்கு பல்வேறு கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.