வவுனியா மாவட்ட மக்கள் இன்றைய தினம் திடீரென மாறுபட்ட காலநிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சூரியன் உதித்த பின்னரும் பனியினால் மூடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டுள்ளது.
வீதிகள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதற்கு சிரமமாக இருந்ததாகவும் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்டது. இருந்த போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும. தற்போது வன்னியில் உணரப்பட்டுள்ளதாக பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.