‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்’ தற்போது அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
மாவட்ட செயலகங்களின் ஊடாக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக மாவட்ட ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவாகத் தயாரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.