இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நேரத்தை கடத்த திக்வெல்ல நக்கல் செய்ததால், இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷமி, அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் குழப்பமடைந்தனர்.
இந்தியா சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி கல்கத்தாவில் நேற்று நிறைவடைந்தது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ஓட்டங்கள் பெற்ற நிலையில், இலங்கை அணி 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, தனது 50வது சர்வதேச சதம் விளாசி அசத்த இந்திய அணி 8 விக்கட்டுக்கு, 352 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதையடுத்து இலங்கை அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டை பறிகொடுத்து தடுமாறியது.
இந்நிலையில் எஞ்சியுள்ள கடைசி சில மணி நேரங்களை கடத்த, இலங்கை அணியின் நிரோஷன் திக்வெல்ல, நடு களத்தில் துடுப்பாடு தயாராகவில்லை என அடுத்ததடுத்து தெரிவிக்க, முதலில் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி கடுப்பாகினார்.
இதே போல அந்த ஓவரில் இரண்டு மூன்று முறை திக்வெல்ல இவ்வாறு செய்ய இந்திய அணித்தலைவர் கோஹ்லி கொந்தளித்தார்.
இதனால், திக்வெல்ல,கோஹ்லி, இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் ஆகியோரை அழைத்து நடுவர்கள் பேசினர்.
பின்னர் , திக்வெல்லவை நடுவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளதுடன் , பின்னர் போட்டி இடம்பெற்றது.
இதனையடுத்து , மைதானத்தில் போதிய வௌிச்சமின்மை காரணமாக போட்டியை நிறைவு செய்ய நடுவர்கள் தீர்மானித்தனர்.
அதன்போது , இலங்கை அணி 7 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 75 ஓட்டங்களைப் பெற்றிருந்து.
இந்நிலையில் , நேற்றைய போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு பெற்றது.