தாய் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கடற்படையின் சார்பில் முழுமையானதும் சரியானதுமான தலைமைத்துவத்தை வழங்க தயாராக உள்ளதாக புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தான் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 22ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.
கடல் மார்க்கமாக ஏற்படும் சகல அச்சுறுத்தல்களிலிருந்து தாய் நாட்டை பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கடற்படைத் தளபதி என்ற வகையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.