நடிகரும் இயக்குனருமான தாவடி மண்ணின் மைந்தன் ஜெய் ஆகாஷ் தமிழர் தாயகத்தில் ரசிகர் மன்ற ஒன்றுகூடலில் கலந்து கொண்டார். இதன்போது ரசிகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.
நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார். அத்துடன் ரோஜாக் கூட்டம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போதும் நடிகர் ஜெய் ஆகாஷ் சி-தமிழ் தொலைக்காட்சியில் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ என்ற தொடரில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Zee Tamil தொலைக்காட்சியின் 2021 சிறந்த சின்னத்திரை நடிகருக்கான போட்டியில் அதிக புள்ளிகளை மக்களிடமிருந்து பெற்று சிறந்த நடிகர் என்ற சாதனையை அடைந்திருந்தார்.
தற்போது சின்னத் திரையில் முக்கிய தொடரில் நடித்து வரும் ஜெய் ஆகாஷ் அமைச்சர் என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]