தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 69 ஆயிரம் கிமீ பரப்பளவும், 272 அடி ஆழமும் கொண்டதாகும்.
தான்சானியா உகாரா தீவில் இருந்து பகோலோரா தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதிக பயணிகளை ஏற்றியதால் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து நீரில் தத்தளித்த 100-க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.
இதில் 32 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மீட்பு பணி லேக் விக்டோரியா ஏரியில் விபத்து ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 1996ம் ஆண்டு இதே ஏரியில் படகு கவிழ்ந்து 800 பேரும், 2011-ல் 200 பேரும் பலியாகியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.