அரேபிக் கடலில் உண்டான தாக்தே சூறாவளி காரணமாக கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் புயலுடன் சேர்ந்து பெய்த கனமழையால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 2,000 க்கும் மேற்பட்டோர் 71 முகாம்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று மாநிலத்தில் சராசரியாக 145.5 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதனால் மின் மற்றும் வேளாண் துறைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் கூறுகின்றன.
புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பஞ்சிம்-கோவாவிலிருந்து தென்மேற்கே 250 கி.மீ தொலைவிலும், மும்பையிலிருந்து 620 கிமீ தென்மேற்கிலும் தற்சமயம் மையம் கொண்டுள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக லட்சத்தீவுகள் மற்றும் தமிழ்நாட்டின் படித்துறை மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்தது.
கடலோர கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இதனால் மீனவர்கள் கடல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வுத் திணைக்களனத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 18 பிற்பகல் அல்லது மாலை வேளையில் போர்பந்தர் மற்றும் நலியா இடையேயான குஜராத் கடற்கரையை புயம் தொடும் என்று பார்க்கப்படுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 175 கிமீ வேகத்தில் அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கொவிட் மேலாண்மை, தடுப்பூசி இயக்கம் மற்றும் பிற மருத்துவ வசதிகள் குறித்து மின்சாரம் காப்புப் பிரதி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைப்பது மற்றும் ஆக்ஸிஜன் தாங்கிகளை தடையின்றி இயக்கத் திட்டமிடுவது குறித்து சிறப்புத் தயாரிப்புகளை உறுதி செய்யுமாறும் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மழைக்காலத்திற்கு முந்தைய மாதங்களில் அரேபிய கடலில் பல ஆண்டுகளில் உண்டான நான்காவது சூறாவளி ‘தாக்தே’ ஆகும்.