பரிசுக்குள் நோயாளர் காவு வண்டி, தீயணைப்பு வண்டி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களில் பொருத்தப்படும் அவசர ஒலிப்பான்களை (sirens) தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமை அதிகாரி Michel Delpuech தெரிவிக்கும் போது, ‘இரட்டை ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் பல இடைஞல்கள் ஏற்படுகின்றன. பல தடவைகள் இவை தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இது பல நகரவாசிகளுக்கு மன அழுத்தத்தை தருகின்றது. தவிர, பல நகரவாசிகள் இந்த ஒலி பல வித அச்ச உணர்வுகளை ஏற்படுத்துகிறது என முறைப்பாடு அளித்துள்ளனர் ‘ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, அதீத ஒலியை அடியோடு நிறுத்திவிட முடியாது. எச்சரிக்கை ஒலி அவசியமானதும் கூட, ஆனால் அது நியாயமாகவும், அவசியம் கருதியும் பயன்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது!’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை காவல்துறை சங்கத்தின் தலைமை செயலாளர் Alliance Jean-Claude Delage இது குறித்து விசனம் தெரிவித்துள்ளார். ‘காவல்துறை அதிகாரிகள் ஒன்றும் சிறுவர்கள் இல்லை. இரண்டை ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை தேவை இல்லாமல் பயன்படுத்துவதற்கு!’ என குறிப்பிட்டுள்ளார்.